English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

வர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்

  • பாஅஅ ஆனது சந்தையில் நிலவும் முறையற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டும்  பானையாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் சந்தை நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியும்.
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை, களஞ்சியப்படுத்தல், விநியோகம் என்பவற்றுடன் தொடர்புடைய பொது மற்றும் விசேட பணிப்புரைகளை நிறைவேற்றுகின்றது.
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையினை எடுத்தல்
  • நியமங்கள் அல்லது கட்டுறுத்துடன் இணங்காத பொருட்கள் மற்றும்  சேவையினை புலனாய்வு செய்தலும் விசாரணை செய்தலும்
  • அதிகாரசபையானது, ஆகக்கூடிய விலை, நியமங்கள், மற்றும் மாதிரிகள் மற்றும் ஏதேனும் பொருட்களின் விற்பனை அல்லது லேபலிடுதல், குறியிடல், போக்குவரத்து, விநியோகம், களஞ்சியப்படுத்தல், வழங்கல், இறக்குமதி, தயாரிப்பு மீதான வேறு ஏதேனும் நிலைமைகள் தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுடன் உடன்படிக்கைகளினை மேற்கொள்ள முடியும்.
  • பாவனையாளர்களின் நாளாந்த வாழ்விற்கு அத்தியவசியமானதென அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவற்றினை அத்தியாவசியப் பொருட்களாக தீர்மானித்தும் வெளிப்படுத்துதலும்
  • போட்டி எதிர் செய்றபாடுகள் மற்றும் ஆதிக்க நிலையிலான துஷ்பிரயோகம் என்பன குறித்து புலனாய்வு அல்லது விசாரணை செய்தல்
  • ஏதேனும் போட்டி எதிர் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்குடன்  எவரேனும் ஆள், ஏதேனும் நிறுவனம், ஏதேனும் பாவனையாளர் அமைப்பு அல்ல்து சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஏதேனும் முறைப்பாடு அல்லது கோரிக்கை தொடர்பில் புலனாய்வு அல்லது விசாரணையினை மேற்கொள்ளுதல்.
புதுப்பிக்கப்பட்டது: 29-11-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.