போட்டி ஊக்குவிப்பு பிரிவு
பானையாளர் அலுவல்கள் அதிகாரசபை
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. சட்டம்
பகுதி III
போட்டி மற்றும் பாவனையாளர் நலன்களை மேம்படுத்துதல்
- உறுப்புரை 34.
- அதிகாரசபையானது அதன் சொந்த பிரேரணையின் பேரில் அல்லது எவரேனும் ஆளினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை அல்லது வேண்டுகோளின் பேரில் அல்லது ஏதேனும் பாவனையாளர் நிறுவனம் அல்லது வர்த்தக சங்கத்தினால் ஏதேனும் போட்டி எதிர் நடவடிக்கைகள் குறித்து புலனாய்வினை மேற்கொள்ளலாம்.
- உட்பிரிவு (1) இன் கீழ் புலனாய்வானது ஆரம்பிக்கப்பட்டு நூறு நாட்களினுள் அது பூர்த்தி செய்யப்பட வேண்டியது அதிகாரசபையின் கடமையாக இருத்தல் வேண்டும்.
- உறுப்புரை 35.
34 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, போட்டி எதிர் நடவடிக்கையானது வியாபாரத்தினை நடாத்துகின்ற ஆள். அவருடன் இணைந்துள்ள ஒருவரினால் பின்பற்றப்படுகின்ற நடத்தையுடன் இணைந்து எடுக்கப்படுகின்ற போது அல்லது அதன் நடத்தைக்காக இலங்கையில் சேவைகளின் பாதுகாப்பு அல்லது வழங்கல் அல்லது இலங்கையில் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் அல்லது கொள்ளலுடன் தொடர்புடைய போட்டியினைக் கட்டுப்படுத்துதல் அல்லது இல்லாமல் செய்தல் அல்லது அதனைத் தடுத்தல் என்பனவற்றினை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுதல் வேண்டும்.
போட்டி எதிர் செயற்பாடுகள்
போட்டி எதிர் செயற்பாடுகள் மீதான முறைப்பாடுகளை கையாள்வது தொடர்பில் அதிகாரசபையினால் பின்பற்றப்படும் நடைமுறை
பேரவைக்கு விண்ணப்பிக்குமிடத்து, விசாரணையின் பின்னர் அத்தகைய செயற்பாடானது பொதுமக்களின் நலன்களுக்கு பாதிப்பாக அமையுமாயின், அத்தகைய போட்டி எதிர் செயற்பாடுகளை நிறுத்துவது தொடர்பில் குறித்த தரப்புக்களுக்கு அவற்றின் போட்டி எதிர் செயற்பாடுகளினை நிறுத்துவது தொடர்பில் அதன் கட்டளையினை வழங்குவது பேரவையின் கடமையாகும். அதிகாரசபைக்கு புலனாய்வு நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்காக மாவட்ட நீதமன்றத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.